என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
விண்கல் உண்டாக்கிய ஏரி...
- இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்றும் உருவாகியிருக்கிறது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.98 கி.மீ விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும்.
இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய ஏரியைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?
நமது சூரிய மண்டலத்தின் செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே சிறிதும் பெரிதுமான கற்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. இவையே விண்கற்கள் எனப்படுகின்றன.
இந்த கற்கள் விண்ணில் இருப்பதனால் இவற்றை விண்கற்கள் என்கிறோம். இவை பூமியின் ஈர்பால் பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போது காற்றின் உராய்வால் வெப்பமடைந்து எரிந்து விடுகின்றன. இப்போது அவற்றை எரிகற்கள் அல்லது எரிநட்சத்திங்கள் என்கிறோம்.
விண்கற்கள் சில மீட்டர் நீளத்திலிருந்து பல கிலோமீட்டர்கள் நீளம் வரையிலும் உள்ளன. பொதுவில் பெரிய அளவில் உள்ள விண்கற்களை அஸ்டிராய்ட் என்று குறிப்பிடுகின்றனர். மாங்காய் அளவு அல்லது கூழாங்கல் அளவுக்கு இருக்கும் விண்கற்களும் விண்வெளியில் நிறையவே உள்ளன.
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்றும் உருவாகியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.98 கி.மீ விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும்.
அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 1.98 கி.மீ விட்டமும் 449 அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது.
இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.
விண்கல் அதீத விசையுடன் இங்கே வந்து விழுந்த போது இங்கிருக்கும் பாறைகள் உராய்வின் சூட்டில் உருகி மேலெழும்பியிருக்கின்றன.
இந்த பாறைகளில் இருக்கும் இரசாயனங்களின் காரணமாக ஏரியில் இருக்கும் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது.
லானோர் ஏரியில் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை உள்ளதாக இருந்தாலும் இதன் தெற்குப்பகுதியில் நன்னீர் இருக்கிறது. ஒரே ஏரியில் உப்பு நீரும் நன்னீரும் இருப்பது லோனார் ஏரியில் மட்டும் தான் !!! .
பழங்காலத்தில் இந்த இடத்தின் மகிமையை அறிந்தோ என்னவோ லோனார் ஏரியை சுற்றிலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஏராளமான கோவில்களை ரிஷிகளும் முனிவர்களும் எழுப்பியிருக்கின்றனர்.
அந்த கோயில்கள் அனைத்தும் இப்போது சிதலமடைத்து காணப்பட்டாலும் அக்கோவில்களுள் பல ரகசியங்கள் பொதிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
- வீரமணி வீராசாமி
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்