என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
தொழில் புரட்சிக்கு வித்திட்ட பஞ்சாலை
- உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்ல ரெயிலும் மோட்டார் வாகனங்களும் உருவாயின.
- மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எல்லாமே மாறிப்போனது.
18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் (கி. பி. 1750) இங்கிலாந்தில் தொடங்கிய பஞ்சாலைகளே தொழிற்புரட்சிக்கு வித்திட்டன.
இன்று நாம் காணும் ஒட்டுமொத்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் பொருளாதார அரசியல் நிர்வாக மேம்பாடுகளுக்கும் தொடக்கப்புள்ளி பஞ்சாலைகளே காரணமாக அமைந்தது என்பதை நினைத்துப் பார்க்கப் பார்க்க வியப்பு ஏற்படுகிறது.
பஞ்சாலைகளுக்குத் தேவையான கட்டுமானப் பொருள்கள், இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு இரும்பு தேவையாக இருந்ததால் சுரங்கத் தொழில் விரிவடைந்தது.
நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நிலக்கரி தேவைப்பட்டது.
உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்ல ரெயிலும் மோட்டார் வாகனங்களும் உருவாயின.
அவற்றுக்குத் தேவையான சக்கரங்கள், பெட்ரோல்-டீசல், பணிமனைகள், சாலைகள் என்று ஒவ்வொன்றாக அல்லது எல்லாமும் காலப்போக்கில் கண்டுபிடிக்கப்பட்டன.
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எல்லாமே மாறிப்போனது!
இவை அத்தனைக்கும் ஆதாரமாக இருந்தது பஞ்சாலைத் தொழில்தான்!
இங்கிலாந்தின் மான்செஸ்டர் என்ற இடம் பஞ்சாலைக்குப் பெயர் பெற்ற இடமாக இருந்தது.
கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டது வெறும் வரலாறாக சுருங்கி விட்டது!
-மா. பாரதிமுத்துநாயகம்.