search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரப் பிரதேச அரசு போட்ட ஒரே உத்தரவு - 13 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளத்தை இழக்கும் அபாயம்
    X

    உத்தரப் பிரதேச அரசு போட்ட ஒரே உத்தரவு - 13 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளத்தை இழக்கும் அபாயம்

    • வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை இந்த உத்தரவை நிறைவேற்றியுள்ளனர்
    • உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர்.

    உத்தரப் பிரதேச யோகி ஆதித்தநாத் அரசின் உத்தரவால் அம்மாநிலத்தில் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை அரசின் மாநவ் சம்பதா [Manav Sampada] இணையத்தில் கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டும் என்பதே அந்த உத்தரவு.

    கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில் சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி தேதியாகக் கடந்த வருட டிசம்பர் 31 ஆம் தேதியை நிர்ணயித்திருந்தது அரசு. பின் அதை ஜூன் 30 வரையும், அதன்பின் ஜூலை 31 வரையும் நீட்டித்திருந்து. ஆனால் வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை தங்களின் சொத்து விவரங்களை அரசின் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

    எனவே ஆகஸ்ட் 31 வரை கடைசி தேதியை மீண்டும் அரசு நீட்டித்திருந்தது. இந்நிலையில் இந்த மாதம் முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 26 சதவீதம் பேர உத்தரவை நிறைவேற்றியுள்ள நிலையில், மீதம் இருக்கும் 13 லட்சம் பேர் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் தங்களின் சம்பளத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×