search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் உறுதி ஆகாததால் 2¾ கோடி பேர் ரெயிலில் பயணிக்க முடியவில்லை
    X

    காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் உறுதி ஆகாததால் 2¾ கோடி பேர் ரெயிலில் பயணிக்க முடியவில்லை

    • நெரிசலான வழித்தடத்தில் போதிய ரெயில்கள் இயக்கப்படாததுதான், காரணம் என்று கருதப்படுகிறது.
    • 1 கோடியே 76 லட்சம் பி.என்.ஆர். எண்கள் தானாகவே ரத்து ஆகிவிட்டன.

    புதுடெல்லி :

    மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், காத்திருப்போர் பட்டியல் ரெயில் பயணிகள் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

    அதற்கு ரெயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த நிதிஆண்டில் (2022-2023) கோடியே 72 லட்சம் பயணிகளின் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் கடைசிவரை உறுதி ஆகவில்லை. அதனால், அவர்களது 1 கோடியே 76 லட்சம் பி.என்.ஆர். எண்கள் தானாகவே ரத்து ஆகிவிட்டன.

    அவர்களால் ரெயிலில் பயணிக்க முடியாமல் போய்விட்டது. அவர்களுக்கு கட்டணம் திருப்பித்தரப்பட்டது.

    இதுபோல், 2021-2022 நிதிஆண்டில், 1 கோடியே 65 லட்சம் பயணிகளும், 2020-2021 நிதிஆண்டில் 61 லட்சம் பயணிகளும், டிக்கெட் உறுதி ஆகாததால் பயணம் செய்ய முடியவில்லை.

    2018-2019 நிதிஆண்டில் 68 லட்சத்து 97 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2017-2018 நிதிஆண்டில் 73 லட்சம் பி.என்.ஆர். எண்களும், 2016-2017 நிதிஆண்டில் 72 லட்சத்து 13 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2015-2016 நிதிஆண்டில் 81 லட்சத்து 5 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2014-2015 நிதிஆண்டில் 1 கோடியே 13 லட்சம் பி.என்.ஆர். எண்களும் ரத்தாகி விட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நெரிசலான வழித்தடத்தில் போதிய ரெயில்கள் இயக்கப்படாததுதான், டிக்கெட் உறுதி ஆகாததற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

    இதை கருத்திற்கொண்டு, சிக்னல் பராமரிப்பு, தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும், இதன்மூலம் கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும் என்றும் ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். அதிகமான ரெயில்கள் இயக்கும்போது, காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் பெறும் வாய்ப்பு குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×