search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Aaditya Thackeray and Siddaramaiah
    X

    2024-25 மத்திய பட்ஜெட்டும்... எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும்...

    • என்டிஏ நலனுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் இந்தியாவுக்கானது அல்ல- சரத் பவார் கட்சி.
    • இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமன் கர்காடகாவிற்கு வெறும் பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது- சித்தராமையா

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.

    இந்த நிலையில் மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் பல மாநிலத் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் NCP (SP)

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடே கிராஸ்டோ "நிர்மலா சீதாராமன் பீகார் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கான பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்தாரா? பாஜகவுக்கும், என்டிஏ அரசுக்கும் இந்த பட்ஜெட் பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு ஆதரவாக இல்லை என்றால் அவர்களுடைய அரசு கவிழும் என்பது தெரியும். என்டிஏ நலனுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் இந்தியாவுக்கானது அல்ல.

    உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா

    உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே "பட்ஜெட்டில் அதிகமான நிதியை ஆந்திரா மற்றும் பீகாருக்கு வழங்கி பாஜக அதன் அரசை பாதுகாக்க விரும்புகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மகாராஷ்டிரா செய்த தவறு என்ன? நாங்கள் வரி வழங்கும் மிகப்பெரிய மாநிலம் இல்லையா? நாங்கள் பங்களித்ததற்கு எதிராக என்ன கிடைத்தது?.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி

    ஜீரோ உத்தரவாதம் இன்றி முற்றிலும் தோல்வியடைந்த பட்ஜெட். தோல்வியடைந்த அரசால் தோல்வியடைந்த நிதி மந்திரியால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, உயரும் பணவீக்கம் போன்ற உடனடியை பிரச்சனை சமாளிப்பதற்குப் பதில், அரசை காப்பாற்ற லஞ்சம் கொடுப்பதற்காக பட்ஜெட்டை உருவாக்கியுள்ளது.

    ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர்

    பட்ஜெட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான ஏதும் இல்லை. அரசியல் நெருக்கடியால் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் அதிகமாக வாழும் மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா

    இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமன் கர்காடகாவிற்கு வெறும் பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது. ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்கள் மட்டும் நிதியை பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை, ஏனென்றால் அவர் (பிரதமர் மோடி) பிரதமராக நீடிக்க அந்த இரண்டு மாநிலங்களின் ஆதரவு தேவை.

    பிஜு ஜனதா தள எம்பி. சஸ்மித் பத்ரா

    நாங்கள் இந்த பட்ஜெட்டுக்கு ஆட்சேபனை தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். ஒடிசாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த பட்ஜெட் ஒடிசாவுக்கு எதிரானது.

    Next Story
    ×