search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓடும் பேருந்தில் 26 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்
    X

    ஓடும் பேருந்தில் 26 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்

    • பேருந்தை ஓட்டி வந்த மற்றொரு ஓட்டுநரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
    • பேருந்தில் மற்ற பயணிகள் உள்ளபோதே ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

    தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்தின் ஓட்டுனரால் 26 வயது பெண் பயணி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று நள்ளிரவில் பேருந்து ஹைதராபாத் நகரில் இருந்தபோது நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு போன் செய்து கூறியுள்ளார்.

    இதனையடுத்து, போலீசார் அந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுனரை கைது செய்ய முயன்றனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய போலீசார், "தப்பியோடிய ஓட்டுநர் ஓடும் பேருந்தில் அந்த பெண்ணின் வாயில் போர்வையை வைத்து அடைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது பயணிகள் பலரும் அந்த பேருந்தில் இருந்துள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த மற்றொரு ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×