search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 92 பேர் சஸ்பெண்ட்- பாராளுமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம்
    X

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 92 பேர் சஸ்பெண்ட்- பாராளுமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம்

    • 2 மணிக்கு பிறகு அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
    • தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு.

    பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடந்த வாரம் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 14 எம்.பி.க்கள் எஞ்சிய கூட்டத் தொடர் முழுவதும் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டனர்.

    பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்கள் அவை அலுவல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    2 தினங்களுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு பிறகு அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்பட்டதாக தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், அண்ணாதுரை, கலாநிதி வீராச்சாமி, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், காங்கிரஸ் எம்.பி.க்களான ஆதிரஞ்சன் சௌத்ரி, திருநாவுக்கரசர், விஜய் வசந்த் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 33 மக்களவை உறுப்பினர்கள் இன்று ஒரே நாளிஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 45 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் மொத்தம் 92 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று 33 மக்களவை எம்.பி.க்கள், 45 மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

    தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பாராளுமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×