என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பொம்மைக்கு பதில் பாம்பை கடித்த 1 வயது குழந்தை.. பாம்பு உயிரிழப்பு
- வீட்டின் மாடியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு பாம்பு வந்துள்ளது
- குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்த்துள்ளார்
பீகாரில் விளையாட்டு பொம்மை என நினைத்து ஒரு வயதுக் குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் [Jamuhar] கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.
குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
குழந்தை கடித்ததில் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அப்பகுதியில் மழைக்காலத்தில் அவ்வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளது.