search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மயக்க மருந்து கொடுத்து 9 வயது சிறுமி பலாத்காரம்.. சாலையில் வீசிச் சென்ற கொடூரம்
    X

    மயக்க மருந்து கொடுத்து 9 வயது சிறுமி பலாத்காரம்.. 'சாலை'யில் வீசிச் சென்ற கொடூரம்

    • வழிப்போக்கர்கள் போலீசில் தெரிவித்ததை அடுத்து சிறுமி மீட்கப்பட்டார்
    • சிறுமியின் நிலையறிந்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்

    பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகாராஷ்ட்டிராவில் ஜல்னா நகரத்தில் உள்ள சாந்தாஞ்ஹிரா சாலையில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை பார்த்த வழிப்போக்கர்கள் போலீசில் தெரிவித்ததை அடுத்து சிறுமி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளதால் அங்கிருந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஒருவன் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துவிட்டு சாலையில் வீசிச் சென்றுள்ளான். சிறுமியின் நிலையறிந்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்திய பின்னர் குற்றவாளி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

    Next Story
    ×