என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிரதமர் வேட்பாளர் யார் ? இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம்.. தேதி அறிவிப்பு
- இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 6ம் தேதி நடைபெற இருந்தது.
- டிசம்பர் 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
இந்த தேர்தல் முடிவுகளின் தாக்கம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 6ம் தேதி நடைபெற இருந்தது. பிறகு, ஆலோசனைக் கூட்டம் ஒத்திடைவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் வரும் 19ம் தேதி அன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் டிசம்பர் 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் டெல்லி வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில், சுமார் 28 எதிர்க்கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.