search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Chandrababu Naidu
    X

    வெள்ள பாதிப்பு ஆய்வு.. டக்குனு வந்த ரெயில் - ஜஸ்ட் மிஸ்சில் எஸ்கேப் ஆன சந்திரபாபு நாயுடு

    • விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளை படகு மற்றும் JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியது.

    விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தற்போது தண்ணீர் வடியத் தொடங்கி உள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

    விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை படகு மற்றும் JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், விஜயவாடா மதுரா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். அப்போது ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திரா மழை வெள்ளத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். முதல் தவணை வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

    Next Story
    ×