search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரு பெண் குரூரமாக இறந்துள்ளார்.. நீங்க சிரிக்கிறீங்க - சுப்ரீம் கோர்ட்டில் கபில் சிபிலுக்கு  குட்டு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஒரு பெண் குரூரமாக இறந்துள்ளார்.. நீங்க சிரிக்கிறீங்க - சுப்ரீம் கோர்ட்டில் கபில் சிபிலுக்கு குட்டு

    • சிபிஐ திறப்பு விளக்கிக் கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.
    • இதனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எரிச்சலடைந்தார்

    கொல்கத்தா R.G கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும் வாதாடுகின்றனர்.

    இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், 'கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாகக் காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்' என்று விளக்கிக்கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.

    இதனால் எரிச்சலடைந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கபில் சிபிலை நோக்கி, 'ஒரு பெண் குரூரமான முறையிலும் கண்ணியக்குறைவான வகையிலும் உயிரிழந்துள்ளாள். அதற்காக குறைந்தபட்சம் சிரிக்காமலாவது இருங்கள்' என்று காட்டமாக பேசியுள்ளார்.

    Next Story
    ×