search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குளிர்கால கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
    X

    குளிர்கால கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

    • குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் பிற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    தலைநகர் டெல்லியில் நாளை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    வக்ப் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இதில், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய், திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் பிற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    அப்போது, குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அதானி மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச புகார் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    மேலும், மணிப்பூர் பிரச்சினை, வட இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் ரெயில் விபத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

    Next Story
    ×