search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்
    X

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

    • பரிசோதனை, சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தும்படி சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
    • தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு கடந்த 12-ந்தேதி தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியிருந்தது. அதன்பிறகு 2 நாட்கள் சற்று குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. எனவே பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தொற்று அதிகரித்து வரும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பரிசோதனை, சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார்.

    தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து கால அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×