search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலுக்கு ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை- அமுல் நிறுவனம் விளக்கம்
    X

    திருப்பதி கோவிலுக்கு ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை- அமுல் நிறுவனம் விளக்கம்

    • ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
    • அமுல் நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவது குறித்த சர்ச்சைக்கு மத்தியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தானத்திற்கு அமுல் நெய் சப்ளை செய்தாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அமுல் நிறுவனம் கூறுகையில்,

    ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

    அமுல் நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எங்கள் பால் பண்ணைகளில் பெறப்படும் பால் கடுமையான முறையில் செல்கிறது. FSSAI ஆல் கலப்படம் கண்டறிதல் உட்பட கடுமையான தர சோதனைகள் மூலம் அனுப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

    அமுல் நிறுவனம் இந்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் பொதுநலனுக்காக வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×