search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எப்படியாவது ராமர் கோவில் கட்டிடுங்க - 30 ஆண்டுகள் மவுன விரதம் இருந்த மூதாட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    எப்படியாவது ராமர் கோவில் கட்டிடுங்க - 30 ஆண்டுகள் மவுன விரதம் இருந்த மூதாட்டி

    • அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    • 30 வருட மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டுவர உள்ளார் ஜார்கண்டை சேர்ந்த மூதாட்டி

    உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜன.22 ஆம் தேதி பிரம்மாண்டமாக திறக்கப்படுகிறது. இந்நிகழ்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி 30 வருட மவுன விரதத்தை ஜார்கண்டை சேர்ந்த 85 வயதான மூதாட்டி முடிவுக்கு கொண்டு வர உள்ளார்.

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் வசிக்கும் 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கும் வரை மவுன விரதம் கடைபிடிக்கப்போவதாக, 1992ம் ஆண்டு சபதம் எடுத்துள்ளார். 1986 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகு தனது வாழ்நாளை ராமருக்காக அற்பணித்துள்ள சரஸ்வதி தேவி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என நாளொன்றில் 23 மணி நேரம் மவுன விரதம் இருந்து வந்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு 24 மணி நேரமும் மவுன விரதத்தை கடைபிடித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜன.22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, தனது 30 வருட மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்..

    ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சரஸ்வதிதேவி ரயில் மூலம் அயோத்தி சென்றுள்ளார். ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அவரது மௌன விரதத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

    Next Story
    ×