என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மந்திரி பதவியை எடுத்துக் கொள்வேன்: பவன் கல்யாண் எச்சரிக்கைக்கு பெண் மந்திரி அளித்த பதில்...
- ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. நிலைமை சீரடையவில்லை என்றால் உள்துறையை நான் எடுத்துக் கொள்வேன்- பவன் கல்யாண்
- பவன் கல்யாண் கருத்து நீங்கள் இன்னும் ஆக்ரோஷமாக முன்னேறலாம் என்று அவர் என்னை ஆதரிப்பதுபோல் உள்ளது- வாங்கலப்புடி அனிதா
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஆந்திர மாநில துணை முதல் மந்திரி பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. இந்த சம்பவங்களுக்கு பெண் மந்திரி வாங்கலப்புடி அனிதா பொறுப்பேற்க வேண்டும். நிலைமை சீரடையவில்லை என்றால் உள்துறையை நான் எடுத்துக் கொள்வேன். உங்கள் பணிகளை நன்றாக செய்யுங்கள். இதே நிலை நீடித்தால் நான் முடிவு எடுக்க வற்புறுத்துவேன் என பவன் கல்யாண் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஆந்திர பெண் மந்திரி வாங்கலப்புடி அனிதா பதில் அளித்துள்ளார். பவன் கல்யாண் கூறியது தொடர்பாக வாங்கலப்புடி அனிதா பதில் அளித்து கூறியதாவது:-
குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்றால் கைது செய்ய மாட்டீர்களா? என பவன் கல்யாண் கேட்டுள்ளார். இந்த கருத்தை நான் மிகவும் நேர்மறையாக (positively) எடுத்துக் கொள்கிறேன். இதற்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். நான் மிகவும் முக்கியமான இலாக்காவை பெற்றுள்ளேன். நீங்கள் இன்னும் ஆக்ரோஷமாக முன்னேறலாம் என்று அவர் என்னை ஆதரிப்பதுபோல் உள்ளது.
இவ்வாறு அனிதா தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சியில் உள்ள பெண் மந்திரியை பவன் கல்யாண் தாக்கி எச்சரிக்கை விடுத்த சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மந்திரி நாராயணா மறுப்பு தெரிவித்தார். எந்த ஒரு துறையின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவிக்க முதல் மந்திரி, துணை முதல் மந்திரி ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்