search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வரியாக ரூ. 2 லட்சம் கோடி: ஆனால் டெல்லிக்கு ஒரு பைசா தரவில்லை- மத்திய அரசு மீது அதிஷி குற்றச்சாட்டு
    X

    வரியாக ரூ. 2 லட்சம் கோடி: ஆனால் டெல்லிக்கு ஒரு பைசா தரவில்லை- மத்திய அரசு மீது அதிஷி குற்றச்சாட்டு

    • வருமான வரி மூலமாக டெல்லி 2 லட்சம் கோடி ரூபாய் பங்களித்துள்ளது.
    • டெல்லி மாநிலத்தில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

    வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வரி வசூல் செய்த போதிலும், மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி பகிர்வு மிகவும் குறைவு என தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு மீது தொடர்ந்த குற்றம்சாட்டி வருகின்றன.

    அந்த வகையில் தற்போது டெல்லி மாநில அரசும் மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லி மாநில மந்திரி அதிஷி கூறியதாவது:-

    மத்திய ஜிஎஸ்டி மூலம் டெல்லி மாநிலம் மத்திய அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வருமான வரி மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் டெல்லி மாநிலத்தில் இருந்து மத்திய அரசு வசூலித்துள்ளது. ஆனால் டெல்லி அரசு கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து கேட்கிறது. ஆனால் கடந்த ஆண்டு ஒரு பைசா கூட மத்தயி அரசு தரவில்லை.

    2001-ல் இருந்து மத்திய வரிகளில் இருந்து டெல்லி மாநிலத்திற்கு 325 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி வந்தது. எனினும் இந்த தொகை கடந்த வருடம் நிறுத்தப்பட்டது. தற்போது நாங்கள் சிங்கிள் பைசா பெறவில்லை.

    இவ்வாறு அதிஷி தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×