search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பத்லாப்பூர் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: உணர்ச்சியற்ற அரசு என சுப்ரியா சுலே கடும் விமர்சனம்
    X

    பத்லாப்பூர் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: உணர்ச்சியற்ற அரசு என சுப்ரியா சுலே கடும் விமர்சனம்

    • மகாராஷ்டிர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
    • காவல்துறையை கண்டு மக்கள் மத்தியில் எந்தவித அச்சமும் இல்லை.

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பத்லாப்பூரில் உள்ள மழலையர் பள்ளியில் 2 சிறுமிகள், அந்த பள்ளியின் துப்புரவு பணியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை கண்டித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது. இந்த நிலையில் அமைதி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று புனேயில் சரத் பவார் மற்றும் மகா விஹாஸ் கூட்டணி கட்சி தலைவர்களி கொட்டும் மழையில் அமைதி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது சுப்ரியா சுலே கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையை கண்டு மக்கள் மத்தியில் எந்தவித அச்சமும் இல்லை. நான் இந்த அரசை கண்டிக்கிறேன். போராடியவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என சிலர் சொல்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ன உணர்ச்சியற்ற அரசை ஒருபோதும் பார்த்ததில்லை. குற்றவாளி கைது செய்யப்படும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.

    இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    Next Story
    ×