என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மினிமம் பேலன்ஸ் இல்லாததால் வங்கிகள் வசூலித்த தொகை இவ்வளவா? மத்திய அரசு வெளியிட்ட பகீர் தகவல்
- பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 முக்கிய தனியார் வங்கிகள் வசூலித்த தொகையின் விவரங்கள் வெளியிடப்பட்டது.
- பெருநகரங்களில் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையிலும் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
புதுடெல்லி:
வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலித்துள்ள அபராத தொகை தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ, ஆக்சிஸ், இந்தஸ்இந்த் ஆகிய தனியார் வங்கிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் வசூலித்த தொகையின் விவரங்களை வெளியிட்டார்.
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புதொகை (மினிமம் பேலன்ஸ்) வைக்காததற்காக அபராதமாக ரூ.21000 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறி உள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஏடிஎம் எந்திரத்தை பயன்படுத்தியதற்காக ரூ.8000 கோடி, எஸ்எம்எஸ் சேவைக்காக ரூ.6000 கோடி என வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பெருநகரங்களில் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையிலும், நகர்ப்புறங்களில் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையிலும், கிராமப்புறங்களில் ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலும் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என பெரும்பாலான வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. இந்த இருப்புத் தொகையை பராமரிக்காததால் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான கட்டணங்கள் விதிக்கப்படலாம்.