என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டானா புயல் எதிரொலி: புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரம் மூடல்
- புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது.
புவனேஸ்வர்:
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.
டானா புயல் 24-ம் தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி, 24-ம் தேதி மாலை 5 மணி முதல் 25-ம் தேதி காலை 9 மணி வரை புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்ப்படுகிறது.
டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. மேலும், 120 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.