search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    தேஜஸ்விக்கு திருட்டுப் பட்டம் கட்டிய பாஜக.. ஏசி-சோபா எல்லாம் போச்சு.. துணை முதல்வர் பங்களாவே காலியாம்!
    X

    தேஜஸ்விக்கு திருட்டுப் பட்டம் கட்டிய பாஜக.. ஏசி-சோபா எல்லாம் போச்சு.. துணை முதல்வர் பங்களாவே காலியாம்!

    • கழிவறையில் இருந்த தண்ணீர் பைப்புகள், பேட்மிட்டன் தரைவிரிப்புகள், தண்ணீர் பவுண்டைன் அலங்கார விளக்குகள், சோபாக்களை காணவில்லை
    • சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்குகளும் காணாமல் போயுள்ளது என்றும் பாஜக தெரிவிக்கிறது.

    பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம்[RJD] கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ். இவர் கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2024 ஜனவரி வரை பீகாரின் துணை முதல்வராக இருந்தார். அந்த பதவியில் இருந்து விலகியதும் துணை முதல்வர் பங்களாவை காலி செய்யும்போது அங்கிருந்த சோபா, ஏசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாஜக, தேஜஸ்வி இல்லத்தை காலி செய்து செல்லும்போது போயிருந்த ஏசி, லைட்கள், கழிவறையில் இருந்த தண்ணீர் பைப்புகள், பேட்மிட்டன் கோர்ட்டில் விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்புகள், தண்ணீர் பவுண்டைன் அலங்கார விளக்குகள், சோபாக்கள் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டு சென்றாக கூறியுள்ளது.

    மொத்தத்தில் அங்கிருந்து செல்லும்போது தேஜஸ்வி அனைத்தையும் உடன் எடுத்து சென்றுள்ளார், இது அவரின் வளர்ப்பு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது, அரசு சொத்தை எப்படித் திருட வேண்டும் என்பதைச் செய்து காட்டியுள்ளார் என்று பீகார் பாஜக ஊடக தலைவர் தானிஷ் சாடியுள்ளார்.

    தற்போது பீகாரின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி அந்த பங்களாவுக்கு நவராத்திரியில் குடியேறுவதாக இருந்தது. ஆனால் அதை சென்று பார்க்கும்போது அனைத்தும் காணாமல் போயுள்ளது தெரியவந்ததாகவும், அதை நிரூபிக்க முடியாதபடி சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்குகளும் காணாமல் போயுள்ளது என்றும் பாஜக தெரிவிக்கிறது.

    இதற்கிடையே பாஜக பொய்கள் மூலம் கீழ்த்தரமான அரசியலைச் செய்துவருவதாக ஆர்.ஜே.டி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய ஜனதா தள தலைவரும் பெயர் முதல்வருமான நிதிஷ் குமார், ஆர்.ஜே.டி- இந்தியா கூட்டணியில் இருந்து பாஜக கூட்டணிக்கு தாவியது குறிபிடித்தக்கது.

    Next Story
    ×