search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாளை பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை: முடிந்தால் கைது செய்யுங்கள் என மோடிக்கு கெஜ்ரிவால் சவால்
    X

    'நாளை பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை': முடிந்தால் கைது செய்யுங்கள் என மோடிக்கு கெஜ்ரிவால் சவால்

    • முன்பு சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இப்போது எனது உதவியாளரை சிறையில் அடைத்துள்ளனர்.
    • ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பாஜக ஏன் விரும்புகிறது.

    நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போகிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன், ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம்.

    முன்பு சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இப்போது எனது உதவியாளரை சிறையில் அடைத்துள்ளனர். இனிமேல் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை சிறையில் அடிப்போம் என கூறுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பாஜக ஏன் விரும்புகிறது.

    நாங்கள் என்ன தவறு செய்தோம். டெல்லியில் உள்ள ஏழை மக்களுக்கு தரமான கல்வி கொடுத்தது தான் நாங்கள் செய்த தவறு. ஏனெனில் பாஜகவால் அதை செய்ய முடியாது. மொஹல்லா க்ளினிக்குகளை உருவாக்கி மக்களுக்கு மருத்துவ சேவை செய்தது எங்கள் தவறு. பாஜகவால் இதை செய்ய முடியாததால் மொஹல்லா க்ளினிக் திட்டத்தை நிறுத்த வேண்டுமென பாஜக விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    சுவாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைதான நிலையில் வீடியோ வெளியிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    Next Story
    ×