search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லாலு, ஜெயலலிதா, கருணாநிதி வரிசையில் Jail Return Club-ல் இணைந்த கெஜ்ரிவால் - பா.ஜ.க. விமர்சனம்
    X

    லாலு, ஜெயலலிதா, கருணாநிதி வரிசையில் 'Jail Return Club'-ல் இணைந்த கெஜ்ரிவால் - பா.ஜ.க. விமர்சனம்

    • இல்லத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் அவரது தாயாரின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் கெஜ்ரிவாலை ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர்.
    • ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமினை நேற்று வழங்கியது. அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இல்லத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் அவரது தாயாரின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் கெஜ்ரிவாலை ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர்.

    இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    இந்நிலையில், 'Jail Return Club'-ல் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்துள்ளார் என்று பா.ஜ.க. எம்.பி.யும், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான சுதான்சு திரிவேதி தாக்கி பேசியுள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:- 1997ல் அப்போதைய பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், 1996ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 1996ல் கருணாநிதி, 2004-ல் சிபுசோரன் வரிசையில், 'ஜெயிலில் இருந்து திரும்பும் முதல்வர்கள்' என்ற எலைட் கிளப்பில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்துள்ளார்.

    2000-ல் ஷீலா தீட்சித்தையும், சோனியா காந்தியையும் சிறைக்கு அனுப்புவோம் என்று பேசிக் கொண்டிருந்தவர், திகாரில் இருந்து திரும்பியதும் தொனி மாறிவிட்டது என்றார்.

    Next Story
    ×