search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டொனால்டு ட்ரம்பிற்காக கட்டப்பட்ட கோயிலில் வழிபாடு நடத்திய தெலுங்கானா கிராம மக்கள்
    X

    டொனால்டு ட்ரம்பிற்காக கட்டப்பட்ட கோயிலில் வழிபாடு நடத்திய தெலுங்கானா கிராம மக்கள்

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • டொனல்டு ட்ரம்ப் சிலைக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் வழிபட்டுள்ளனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்றார். கமலா ஹாரிஸ் 226 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

    அமெரிக்க துணை அதிபராக ஜேடி வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜேடி வான்ஸ் மனைவி உஷா சிலுக்குரி ஆந்திர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இதனால் தெலுங்கு மக்கள் ஜேடி வான்ஸ் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஜங்கான் மாவட்டத்தில் உள்ள கொன்னே கிராம மக்கள் டொனால்டு டிரம்ப்பிற்கு கட்டப்பட்டுள்ள கோவிலில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டுள்ளனர்.

    கிருஷ்ணா என்ற இளைஞர் 2018 ஆம் ஆண்டு தனது பூஜை அறையில் டொனால்ட் டிரம்பின் புகைப்படத்தை வைத்து வழிபட ஆரம்பித்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு தனது வீட்டின் முன்பு 6 அடி உயர டிரம்ப் சிலையை அமைத்து பூஜைகள் செய்து பால் அபிஷேகமும் செய்தார். இதற்காக அவர் ரூ.2 லட்சம் வரை செலவு செய்தார். இதனால் அந்த கிராமத்தினர் அவரை ட்ரம்ப் கிருஷ்ணா என்று அழைக்க ஆரம்பித்தனர்.

    இந்நிலையில் கிருஷ்ணா தனது 33வது வயதில் 2020 அக்டோபரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ட்ரம்ப் வெற்றியை கொண்டாடும் வகையில் கிருஷ்ணாவின் உறவினர்கள் அவரது வீட்டில் உள்ள ட்ரம்ப் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்து வழிபட்டுள்ளனர்.

    Next Story
    ×