search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் திடீர் தீ
    X

    வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் திடீர் தீ

    • 93 தொகுதிகளில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    • பேருந்தில் தீ பிடித்தவுடன் தேர்தல் அதிகாரிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.

    மத்தியப்பிரதேசம்:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மாதம் 19, 26 மற்றும் மே 7-ந்தேதி என 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    நேற்று நடைபெற்ற 3-வது கட்ட தேர்தலில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற 93 தொகுதிகளில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து 4 எந்திரங்கள் சேதம் அடைந்துள்ளன.

    நேற்று வாக்குப்பதிவு முடிந்த பிறகு பேதுல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுலாவில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டன. அப்போது திடீரென பேருந்தில் தீப்பிடித்தது.

    பேருந்தில் தீ பிடித்தவுடன் தேர்தல் அதிகாரிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். இருப்பினும் பேருந்தில் இருந்த 4 எந்திரங்கள் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×