என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வெளியுறவு மந்திரி பேட்டியை ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு தடை: கனடாவுக்கு இந்தியா கண்டனம்
- வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- அந்நாட்டு வெளியுறவு மந்திரி பென்னி வோங் உடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
புதுடெல்லி:
கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்துக் கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தில், கனடாவிடம் இருந்து நியாயத்தை எதிர்பார்க்கிறோம் என கூறியிருந்தார்.
இதற்கிடையே, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்நாட்டு வெளியுறவு மந்திரி பென்னி வோங் உடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது:
கனடா உடனான உறவில் மூன்று முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. முதலில், எவ்வித ஆதாரமும் அளிக்காமல் இந்தியாமீது பொய் குற்றச்சாட்டுகளை கூறியது. அடுத்தது, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கண்காணிக்கப்படுவது ஏற்புடையதல்ல. தற்போது கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதிலிருந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பிரிவினைவாத அமைப்புக்கு அங்கு அரசியல் ரீதியில் ஆதரவு அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்தப் பேட்டியை ஒளிபரப்பு செய்ததற்காக ஊடகத்தின் சமூக வலைதள பக்கத்துக்கு கனடா அரசு தடை விதித்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
குறிப்பிட்ட ஊடகத்தின் சமூக வலைதள பக்கத்திற்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. ஜெய்சங்கர் பேட்டி அளித்த சில மணி நேரத்தில் இது நடந்துள்ளது. இது எங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. விசித்திரமாக உள்ளது. பேச்சு சுதந்திரம் குறித்து கனடா போடும் நாடகத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
அந்தக் கூட்டத்தில் எந்தவித ஆதாரங்கள் இல்லாமல் கனடா குற்றம்சாட்டுவதையும், இந்திய தூதரக அதிகாரிகளை கனடா கண்காணிப்பதையும், இந்தியாவிற்கு எதிரான அமைப்புகளுக்கு அந்நாடு அளித்துள்ள அரசியல் அடைக்கலத்தையும் எடுத்துக் கூறினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா ஊடகத்திற்கு கனடா அரசு தடை விதித்ததற்கான காரணத்தை அனைவரும் புரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்