என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மத்திய பட்ஜெட்.. வருமான வரி விதிப்பு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?
- நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மாத ஊதியம் பெறுவோருக்கான ஸ்டாண்டர்ட் டிடக்சன் ரூ.50,000-ல் இருந்து ரூ.75ஆயிரமாக உயர்வு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (ஜூலை 23) காலை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அவரது உரையில்,
மூன்றில் இரண்டு பங்கு மக்கள் புதிய தனிநபர் வருமான வரிமுறை அமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர், அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது
தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்படுகிறது, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்படும், ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரியும் குறைக்கப்படுகிறது
நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையவர்த்தகத்திற்கான TDS வரி 11 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long-term capital gains tax) 10%-ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம் பெறுவோருக்கான ஸ்டாண்டர்ட் டிடக்சன் ரூ.50,000-ல் இருந்து ரூ.75ஆயிரமாக உயர்வு, தனிநபர் புதிய வருமான வரி முறையில் மாற்றம் செய்யப்டுகிறது. ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது
ஆண்டுக்கு ரூ.3 முதல் 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம் வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. ரூ.10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15 சதவீதமும், ரூ..12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், 15 லட்சத்துக்கு மேல் வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்