என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
- இந்தியாவில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
- கடந்த 12 நாளில் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்தியாவில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலால் அவசர அவரமாக தரையிறக்கப்படுகின்றன.
கடந்த 12 நாட்களில் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. சமூக வலைதள பக்கங்கள் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறன.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வெளியான பதிவுகளை 72 மணி நேரத்திற்குள் சமூக வலைதள நிறுவனங்கள் நீக்கவேண்டும். அவ்வாறு நீக்கவில்லை என்றால் ஐ.டி. சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.