search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்கள் முன் வசமாக சிக்கிய காங்கிரஸ்: கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி
    X

    மக்கள் முன் வசமாக சிக்கிய காங்கிரஸ்: கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி

    • உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது.
    • அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினமானது என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தது. சக்தி திட்டம் எனும் இத்திட்டத்தின் மூலம் கர்நாடகா முழுவதும் பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்.

    இந்நிலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், "பஸ் டிக்கெட் எடுக்க எங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்' என சில மாணவிகள் இ - மெயில் மற்றும் 'எக்ஸ்' வலைத்தளம் வழியாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து காங்கிரஸ் மாநில பிரிவுகள், சரியான பட்ஜெட்டையும், நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்காத தேர்தல் வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    தேர்தலுக்கு முந்தைய சில அறிவிப்புகளைக் கடைப்பிடிப்பதில் கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சனைகள் பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில், காங்கிரஸ் மாநில பிரிவுகள், சரியான பட்ஜெட்டையும், நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்காத வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும்.

    உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினமானது அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது.

    ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் அவர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். அதை அவர்கள் ஒருபோதும் வழங்கமுடியாது. இப்போது மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள்.

    மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆட்சிக்கு வந்தால் அவற்றை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்தும் அக்கட்சி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறது.

    இன்று காங்கிரசுக்கு எந்த மாநில அரசுகள் உள்ளன? இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வளர்ச்சிப் பாதை மற்றும் நிதி ஆரோக்கியம் மோசமாக இருந்து வருகிறது. அவர்களின் உத்தரவாதங்கள் என அழைக்கப்படுபவை நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. இது இந்த மாநிலங்களின் மக்களுக்கு இழைக்கப்படும் பயங்கரமான வஞ்சகமாகும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×