search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்திக்கு என்.டி.ஏ. தலைவர்கள் மிரட்டல்: காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்
    X

    ராகுல் காந்திக்கு என்.டி.ஏ. தலைவர்கள் மிரட்டல்: காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்

    • பாஜக தலைவர்கள் மட்டுமல்ல. ஏராளமான தலைவர்கள் இதுபோன்ற மிரட்டல் விடுத்து வருகின்றனர்
    • ராகுல் காந்தி எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. பற்றி பேசுவதால் அவர்களுக்கு பிடிக்கவில்லை.

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மிரட்டல் விடுப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மற்றும் பொது செயலாளரான அஜய் மக்கான் துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய மக்கான் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அஜய் மக்கான் கூறுகையில் "மறைந்த இந்திரா காந்தி, மறைந்த ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது உயிரை நாட்டிற்கு தியாகம் செய்தனர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு பிறகும் கூட இதுபோன்ற மிரட்டலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பாஜக தலைவர்கள் மட்டுமல்ல. ஏராளமான தலைவர்கள் இதுபோன்ற மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆனால், பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராகுல் காந்தி எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. பற்றி பேசுகிறார். பழங்குடியினர் மற்றும் மைனாரிட்டி மக்களை பற்றி பேசுகிறார். இது பாஜக-வினருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இந்த காங்கிரஸ்ட் கட்சி. நாங்கள் பயப்படமாட்டோம். பணிந்து செல்லமாட்டோம் என்பதை நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.

    "நீங்கள் நன்றாக நடந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் பாட்டிக்கு (இந்திராகாந்தி) நடந்ததை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என கடந்த செப்டம்பர் 11-ந்தேதி மார்வாவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்கியில் பகிரங்க சவால் விடப்பட்டது.

    ஏக்நாத ஷிண்டே சிவசேனா கட்சி எம்எல்ஏ கெய்க்வாட் "மக்களவை எதிர்க்கட்சி தலைவர் நாக்கை துண்டிப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என அறிவித்திருந்தார்.

    மத்திய ரெயில்வே இணை மந்திரி ரவ்னீத் பிட்டு, "மக்களவை எதிர்க்கட்சி தலைவர் நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி" என குற்றம்சாட்டியிருந்தார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் நாடு முழுவதும் அமைதியை சீர்குலைப்பது, குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர்கள் பேச்சு இருப்பதாக அந்த புகாரில் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×