என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம்
Byமாலை மலர்26 Oct 2023 8:31 AM IST
- மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து இருந்தது.
- சில தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போபால்:
மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து இருந்தது.
ஆனால் சில தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீட்டு முன் அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதைத்தொடர்ந்து 4 தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றி விட்டு புதிதாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி சுமாலி, பிபாரியா, பாட்நகர், ஜவோரா ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 30-ந்தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×