என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக ஜிது பத்வாரி நியமனம்
- கமல்நாத் அந்த பதிவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
- ஜிது பத்வாரி உயர்கல்வி துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக ஜிது பத்வாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்துவந்த கமல்நாத் அந்த பதிவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜிது பத்வாரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரிடம் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஜிது பத்வாரி அம்மாநில உயர்கல்வி துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. 163 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. வெறும் 66 தொகுகதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.
தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவராக ஜிது பத்வாரி நியமிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, அம்மாநிலத்தில் கட்சி ரீதியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.