என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கடும் விமர்சனம் எதிரொலி: போப் ஆண்டவர்- மோடி குறித்த பதிவை நீக்கி மன்னிப்பு கேட்ட கேரள காங்கிரஸ்
- ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி போப் ஆண்டவரை சந்தித்தார்.
- மோடி தன்னை கடவுள் அனுப்பியவர் எனத் தெரிவித்திருந்ததை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் பதிவு.
ஜி-7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டில் வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார்.
இந்நிலையில், மோடியை போப் பிரான்சிஸ் சந்தித்தது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டது. அதில், "கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் பிரான்சிஸ்க்கு கிடைத்துள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பாஜக தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர். "தீவிர இஸ்லாமிக் மற்றும் நகர்ப்புற நக்சலைட்டுகளால் கையாளப்படுவதாக அறியப்படும் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் எக்ஸ், தொடர்ந்து தேசிய தலைவர்களை இழிவுப்படுத்தும் பதிவுகளை பதிவிட்டு வருகிறது. தற்போது மரியாதைக்குரிய போப் ஆண்டவர் மற்றும் கிறிஸ்டியன் சமூகத்தினரை கிண்டல் செய்துள்ளது" என கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, பொது செயலாளர் கேசி வேணுகோபால் இதை ஆதரிக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.
கேரள மாநில பாஜக பொது செயலாளர் ஜார்ஜ் குரியன் "பதிவு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக கேரளாவில் கிறிஸ்தவம் மூன்றாவது பெரிய மதமாக உள்ளது. அவற்றை புண்படுத்தும் வகையில் இருந்து" என்றார்.
பாஜக ஐடி அணி பொறுப்பாளர் அமித் மால்வியா "மற்றவர்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்துவதுதான் காங்கிரஸ் வரலாறு. கத்தோலிக்க மதத்தவரான முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
கடவுளைப் பற்றி கேலி செய்வது மதங்களுக்கு எதிரானது அல்ல என்று போப் பிரான்சிஸ் கூறியதை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் "ஒரு பார்வையாளரின் உதடுகளிலிருந்து கூட புத்திசாலித்தனமான புன்னகையை நீங்கள் கொண்டு வந்தால், நீங்கள் கடவுளையும் சிரிக்க வைக்கிறீர்கள் என போப் ஆண்டவர் கூறினார்" என தெரிவித்தது.
இது ஒரு நகைச்சுவைாக்க பதிவிட்டதாகவும், மக்களை சந்திக்காமல் இருக்கும் பிரதமர் மோடியை செயலை வெளிக்காட்டுவதற்கும், அவர் தன்னை வழக்கமான மனிதன் அல்ல. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றார். அதன்அடிப்படையில் இந்த டுவிட்டர் இதற்கான கேலி ட்வீட் ஆகும்" கேரள மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் விடி பல்ராம் நியாயப்படுத்திருந்தார்.
இருந்த போதிலும் கடுயைமான விமர்சனம் எழுந்த நிலையில், டுவிட்ட பதிவை நீக்கம் செய்துவிட்டது, இது கிறிஸ்தவர்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என கேரள மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்