search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல்  வாக்கு எண்ணிக்கை:  முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்
    X

    அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்

    • அரியானா மாநிலத்தில் மெஜாரிட்டிக்கு 46 இடங்கள் தேவை.
    • ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் ஐந்து நியமன எம்.எல்.ஏ.-க்களை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.

    அரியானாவில் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    Live Updates

    • 8 Oct 2024 1:11 PM IST

      தற்போது வரை அரியானாவில் பா.ஜ.க. 39.58 சதவீதம் வாக்குகள், காங்கிரஸ் 40.03 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன. 

    • 8 Oct 2024 1:08 PM IST

      அரியானாவின் "நு" தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஃப்தாப் அகமது 46963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • 8 Oct 2024 1:07 PM IST

      அரியானாவில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க உள்ள நிலையில் அக்கட்சியின் டெல்லி தலைமையகத்தில் பிரதமர் மோடி தொண்டர்களிடையே உரையாற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • 8 Oct 2024 1:05 PM IST

      அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி மற்றும் முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதம் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    • 8 Oct 2024 1:02 PM IST

      அரியானாவில் பா.ஜ.க. 49 இடங்களிலும் காங்கிரஸ் 35 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி 52 இடங்களிலும், பா.ஜ.க. 27 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.

    • 8 Oct 2024 1:01 PM IST

      அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி லாத்வா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 12423 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    • 8 Oct 2024 12:59 PM IST

      அரியானா ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் 5675 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    • 8 Oct 2024 12:55 PM IST

      உதம்பூர் கிழக்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ரன்பீர் சிங் பதானியா 2349 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பசோஹ்லி தொகுதியில் தர்ஷன் குமார் 16034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • 8 Oct 2024 12:53 PM IST

      ஜம்மு காஷ்மீரில் குரேஸ் (எஸ்.டி.) தொகுதியில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் நசீர் அகமது கான் 1132 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஹஸ்ரத்பால் தொகுதியில் சல்மான் சாகர் 10295 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • 8 Oct 2024 12:51 PM IST

      ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க., ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    Next Story
    ×