search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல்  வாக்கு எண்ணிக்கை:  முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்
    X

    அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்

    • அரியானா மாநிலத்தில் மெஜாரிட்டிக்கு 46 இடங்கள் தேவை.
    • ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் ஐந்து நியமன எம்.எல்.ஏ.-க்களை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.

    அரியானாவில் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    Live Updates

    • 8 Oct 2024 12:49 PM IST

      அரியானாவில் காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா 71753 வாக்குகள் பெற்று 52341 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    • 8 Oct 2024 12:46 PM IST

      ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் 54528 பெற்று 4684 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    • 8 Oct 2024 12:42 PM IST

      அரியானாவில் பா.ஜ.க. 49 இடங்களிலும் காங்கிரஸ் 34 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி 52 இடங்களிலும், பா.ஜ.க. 27 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.

    • 8 Oct 2024 12:06 PM IST

      பிடிபி தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா மெகபூபா முப்தி ஸ்ரீகுவ்வாரா-பிஜ்பெகாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 5067 வாக்குள் பின் தங்கியுள்ளார். மக்கள் தீர்ப்பை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

    • 8 Oct 2024 11:57 AM IST

      ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தரிக் ஹமீத் சென்ட்ரல் சால்டெங் தொகுதியில் 10263 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

    • 8 Oct 2024 11:52 AM IST

      எலினாபாத் தொகுதியில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் அபய் சிங் காங்கிரஸ் வேட்பாளரை விட 7710 வாக்குகள் பின் தங்குகிறது. இவரது மகன் அரஜூன் சவுதாலா 6161 வாக்குள் முன்னணியில் உள்ளார்.

    • 8 Oct 2024 11:47 AM IST

      உமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் 5133 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். புட்காம் தொகுதியில் 8612 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    • 8 Oct 2024 11:45 AM IST

      அரியானாவில் பா.ஜ.க. 50 இடங்களிலும் காங்கிரஸ் 34 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி 52 இடங்களிலும், பா.ஜ.க. 26 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.

    • 8 Oct 2024 11:42 AM IST

      லாத்வா தொகுதியில் 7839 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் முதல்வர் நயாப் சிங் சைனி

    • 8 Oct 2024 11:40 AM IST

      ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் 30303 பெற்று வெறும் 38 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    Next Story
    ×