search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொடூரமாக தாக்கிய மாடு.. துணிச்சலாக போராடிய சிங்க பெண் - வைரலாகும் வீடியோ
    X

    கொடூரமாக தாக்கிய மாடு.. துணிச்சலாக போராடிய 'சிங்க பெண்' - வைரலாகும் வீடியோ

    • வழிதவறி வந்த மாடு ஒன்று அப்பெண்ணை தாக்கி கீழே தள்ளியது.
    • மாட்டின் கொம்புகளை அப்பெண் கெட்டியாக பிடித்தார், இதனால் மாடு சிலநொடிகள் அமைதியாக இருந்தது.

    டெல்லியில் குறுகலான பாதையில் சென்ற கொண்டிருந்த பெண்ணை மாடு ஒன்று கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் அக்டோபர் 30 அன்று டெல்லியில் உள்ள ஆயா நகரில் நடந்துள்ளது.

    பெண் ஒருவர் டெல்லியின் குறுகலான பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வழிதவறி வந்த மாடு ஒன்று அப்பெண்ணை தாக்கி கீழே தள்ளியது. அச்சமயத்தில் துணிச்சலாக செயல்பட்ட அப்பெண் மாட்டின் கொம்புகளை கெட்டியாக பிடித்தார். இதனால் மாடு சில நொடிகள் தாக்க முடியாமல் அமைதியாக இருந்தது.

    மாட்டின் கொம்புகளை பிடித்தபடியே அப்பெண் கூச்சலிட்டதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாட்டை விரட்ட முயன்றனர். இதனையடுத்து மாடு அங்கிருந்து ஓடியது. மாடு தாக்கியதில் அப்பெண் பலத்த காயமடைந்தார்.

    தெருவில் சுற்றி வரும் மாடுகள் அவ்வப்போது மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, தெருவில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர்.

    டெல்லியில் அதிகரித்துள்ள சட்டவிரோத பால்பண்ணைகள் தான் தெரு மாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். சட்டவிரோத பால்பண்ணைகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை பால் கறந்த பிறகு தெருவில் விட்டு விடுகிறார்கள். தெருவில் சுற்றி திரியும் மாடுகளால் சாலை விபத்துகள் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Next Story
    ×