search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
    X

    லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

    • லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார்.
    • அந்த காலக்கட்டத்தில் வேலைக்குப்பதிலாக நிலங்களை குறைந்த விலையில் பெற்றதாக குற்றச்சாட்டு.

    பீகார் மாநிலம் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். இவரது மகன் தேஜஸ்வி யாதவ். இவர் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் ஆவார்.

    இவர்கள் இருவர் உள்பட பலர் வேலைக்காகச நிலங்கள் பெற்றது தொடர்பான பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

    நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அக்டோபர் 7-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 6-ந்தேதி தாக்கல் செய்தது. சிபிஐ வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

    லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார். அப்போது மேற்கு மத்திய மண்டலம் ரெயில்வேயின் மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் குரூப்-டி நியமனம் உருவாக்கப்பட்டபோது, வேலைக்கு பதிலாக நிலங்களை விண்ணப்பத்திவர்களிடம் இருந்து லாலு பிரசாத் குடும்பம் அல்லது கூட்டாளிகள் குறைந்த விலைக்கு பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

    Next Story
    ×