search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவாலை மீண்டும் கைது செய்ய போகிறீர்களா? ED-யிடம் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
    X

    கெஜ்ரிவாலை மீண்டும் கைது செய்ய போகிறீர்களா? ED-யிடம் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

    • அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
    • விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிறையில் இருக்கும் அவரை சிபிஐ மேலும் கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இந்த ஜாமினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் ஜாமினுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது டெல்லி மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் "நான் குழப்பம் அடைகிறேன். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?. அவரை மீண்டும் கைது செய்ய போகிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.

    இன்றைய விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் நீதிபதி விவேக் குர்னானி ஆஜரானார். அவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு இன்று மற்றொரு வழக்கில் ஆஜராக இந்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி "அமலாக்கத்துறையின் இந்த வழக்கு முற்றிலும் துன்புறுத்தலின் ஒன்றாகும்" எனத் தெரிவித்தார்.

    பின்னர் வழக்கு விசாரணை சில மணி நேரம் ஒத்திவைத்தார்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மதுபானம், தனியார் லைசென்ஸ் பெற்று கடைகளை நடத்தலாம் என்பதுதான்.

    2022-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி தலைமை செயலாளர் நரேஷ் குமார் இந்த மதுபானக் கொள்கையில் விதிமீறல் மீறப்பட்டதை கோடிட்டு காட்டினார். மேலும் மதுபான லைசென்ஸ்க்காக மறைமுக பலன்கள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

    மதுபானக் கொள்கை உருவாக்கத்தில் மதுபான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு 12 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்பதால் அதில் ஈடுபட்டுள்ள்ளனர். இதற்கு பலனாக தெற்கு குரூப் ஆம் ஆத்மி கட்சிக்கு கிக்பேக்ஸ் என்ற முறையில் 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அதில் ஒரு பகுதியை பொது ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது என சிபிஐ குற்றம்சாட்டியது. கிக்பேக்ஸ் நடைபெற்றுள்ளதால் பணமோசடி என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    Next Story
    ×