என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லி அரசால் நாட்டிலேயே மிகப்பெரிய "கன்வார் முகாம்" அமைப்பு: அதிஷி
- டெல்லி முழுவதும் 185 கன்வர் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 20 ஆயிரம் தங்கும் வகையில் காஷ்மீர் கேட் அருகே முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள். அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவுடையும்.
கன்வார் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு உத்தர பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முகாம் அமைத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அதன் அடிப்படையில் டெல்லியில் நாட்டிலேயே மிகப்பெரிய முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநில வருவாய்த்துறை மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார். 20 ஆயிரம் தங்கும் வகையில் காஷ்மீர் கேட் அருகே முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தள்ளார்.
டெல்லி முழுவதும் 185 கன்வார் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் புகாத கூடாரங்கள், தூங்குவதற்கான ஏற்பாடுகள், சுத்தமான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் வழங்கப்படும்.
மெடிக்கல் ஸ்டாஃப்கள் 24X7 என்ற அடிப்படையில் தயார் நிலையில் இருப்பார்கள். தேவைப்பட்டால் உடனடியாக பக்தர்கள் மெடிக்கல் உதவி பெற முடியும். உள்ளூர் மருந்தகங்கள் முகாம்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவசரத் தேவைக்காக CATS ஆம்புலன்ஸ் குவிக்கப்பட்டுள்ளன.
அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு டெல்லி எல்லை வழியாக பக்தர்கள் (Kanwariyas) செல்லும்போது டெல்லி மாநிலத்தை சென்றடைவார்கள். அவர்கள் வசதிக்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.