search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமியை கர்ப்பமாக்கிய அதிகாரி- கருவை கலைக்க உதவிய மனைவி: டெல்லி காவல்துறை அதிரடி நடவடிக்கை
    X

    சிறுமியை கர்ப்பமாக்கிய அதிகாரி- கருவை கலைக்க உதவிய மனைவி: டெல்லி காவல்துறை அதிரடி நடவடிக்கை

    • பல மாதங்களாக அந்த சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்
    • சிறுமி கர்ப்பமடைந்ததை அதிகாரி தன் மனைவியிடம் தெரிவித்தார்

    புதுடெல்லியில் தற்போது 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 2020ல் தனது தந்தையை இழந்தார்.

    இதனையடுத்து இவரது தந்தையின் நண்பர் அச்சிறுமியை தனது பாதுகாப்பில் வளர்ப்பதற்காக தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இவர் புதுடெல்லியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டு துறையில் மூத்த அதிகாரியாக பணிபுரிபவர்.

    தனது வீட்டிற்கு அந்த சிறுமியை அழைத்து சென்ற அந்த அதிகாரி, 2020லிருந்து 2021 வரையிலுள்ள காலகட்டத்தில் அச்சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுத்துள்ளார்.

    இதனால் அச்சிறுமி கர்ப்பமடைந்தார்.

    இச்செய்தியை அந்த அதிகாரி அவர் மனைவியிடம் தெரிவித்தார். இதனையறிந்த அவர் மனைவி கர்ப்பத்தை கலைக்கும் மருந்துகளை தனது மகனை வாங்கி வரச்சொன்னார். மருந்துகளின் மூலம் அந்த சிறுமியின் கர்ப்பத்தை அக்குடும்பத்தினர் கலைத்தனர்.

    சமீபத்தில் இவையனைத்தையும் அச்சிறுமி காவல்துறையிடம் புகாராக அளித்தார்.

    காவல்துறை இப்புகாரை தீவிரமாக விசாரணை செய்தது. விசாரணைக்குபின் அந்த அதிகாரியின் குற்றம் நிரூபணமானது.

    இதனையடுத்து இந்திய தண்டனை சட்டத்தின் பல பிரிவுகளிலும் போக்ஸோ சட்டத்திலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் மனைவியின் மீது குழந்தைகளின் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அச்சிறுமி தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதால் அது நிறைவடைந்ததும் அவரது வாக்குமூலம் ஒரு மாஜிஸ்திரேட் முன்பாக பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற தொடங்கும்.

    இந்த மூத்த அதிகாரியின் மீது சாட்டப்பட்டிருக்கும் கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை மேலும் தீவிரமாக விசாரித்து வருகிறது.

    Next Story
    ×