search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி காவல்துறை அத்துமீறல்- சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் கூறிய காங்கிரஸ் எம்.பி.க்கள்
    X

    டெல்லி காவல்துறை அத்துமீறல்- சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் கூறிய காங்கிரஸ் எம்.பி.க்கள்

    • பெண் உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் மிருகத்தனமானது என விஜய் வசந்த் எம்.பி. கூறி உள்ளார்.
    • ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை கொடுமைப்படுத்துவதாக புகார்

    புதுடெல்லி:

    நேசனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் அத்துமீறலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்து புகார் கூறினர்.

    இது தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:-

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அக்கிரமத்தை கட்டவிழ்த்து விட்ட டெல்லி போலீஸ் மீது புகார் தெரிவித்து மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம்.

    குறிப்பாக பெண் உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் மிருகத்தனமானது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினரான தலைவர் ராகுல் காந்தி அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தொடர்ந்து மூன்று நாட்களாக விசாரணைக்கு அழைத்து கொடுமைப்படுத்தும் அமலாக்கப்பிரிவு துறைக்கு எதிராகவும் புகார் தெரிவித்தோம். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுதரி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×