என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு.. நாளை பதவியேற்பு - மோடி பங்கேற்பு
- பிற்பகல் 3.30 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
- பிரதமர் மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்
மாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. ஆனால் ஷிண்டே - பட்னாவிஸ் இடையிலான முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் மும்பையில் நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்த்தில் மகாராஷ்டிர முதலமைச்சராகத் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டணியில் அதிக இடங்களில் [ 132 தொகுதிகளில்] பாஜக வெற்றி பெற்றதால் 2014 முதல் 2019 வரை முதல்வராக இருந்த பட்னாவிஸ் முதல்வர் கனவில் இருந்தார். ஆனால் கூட்டணி கட்சியான சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை விட்டுச் செல்ல மனமில்லாமல் இருந்தார்.
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேவிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியது. இதில் முதல்வர் பதவியை பாஜகவுக்கே கொடுக்க கூட்டணி தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே(சிவசேனா), அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) சம்மதித்தனர். இருப்பினும் அமைச்சரவை பங்கீட்டில் இழுபறி நீடித்ததால் கடந்த 10 நாட்களாக காலாவதியான சட்டமன்றத்துடன் மகாராஷ்டிரா அரசியல் களம் குழப்பத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரை மேற்பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்
முன்னதாக நடந்த பாஜக மையக் குழுக் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் பெயர் முன்மொழியப்பட்டதன் படி இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
மாகாராஷ்டிர புதிய முதல்வர் பதவியேற்பு விழா நாளை [ டிசம்பர் 5] மாலை தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதல்-மந்திரி பதவி மற்றும் சில முக்கிய துறைகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்