search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கடந்த 10 ஆண்டுகளில் 182 சதவீதம் உயர்ந்த நேரடி வரி வசூல்: 2023-24-ல் 19.60 லட்சம் கோடி ரூபாய்
    X

    கடந்த 10 ஆண்டுகளில் 182 சதவீதம் உயர்ந்த நேரடி வரி வசூல்: 2023-24-ல் 19.60 லட்சம் கோடி ரூபாய்

    • 2014-15-ம் ஆண்டில் நேரடி வரி வசூல் 6.96 லட்சம் கோடி. 2023-24-ல் 19.60 கோடி ரூபாயாக உயர்வு.
    • தனிப்பட்ட வருமான வரி வசூல் 10.45 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    மோடி பிரதமராக பதவி ஏற்ற 10 ஆண்டுகளில் நேரடி வரி வசூல் 182 சதவீதம் உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2014-15 நிதியாண்டில் நேரடி வரி வசூல் 6.96 லட்சம் கோடியாக இருந்தது. இதில் கார்ப்பரேட் வரி 4.29 லட்சம் கோடியும், தனிப்பட்ட வருமான வரி வசூல் 2.66 லட்சம் கோடியாகும்.

    இது 2023-24 நிதியாண்டில் 182 சதவீதம் உயர்ந்து 19.60 லட்சம் கோடி ரூபாய் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தனிப்பட்ட வருமான வரி வசூல் 10.45 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது சுமார் 4 மடங்கு அதிகமாகும்.

    2014-15-ம் ஆண்டில் income tax returns filed (including revised returns) 4.04 கோடியாக இருந்த நிலையில், 2023-24-ல் 8.61 கோடியாக உயர்ந்துள்ளது. Direct tax-to-GDP வீதம் 5.55 சதவீதத்தில் இருந்து 6.64 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2014-15 (Assessment Year- AY) ஆண்டில் 5.70 கோடியாக இருந்த நிலையில், 2023-24-ல் 10.41 கோடியாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×