search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மருத்துவமனையில் டாக்டர் சுட்டுக்கொலை- போலீசார் விசாரணை
    X

    மருத்துவமனையில் டாக்டர் சுட்டுக்கொலை- போலீசார் விசாரணை

    • குண்டுகள் பாய்ந்த டாக்டர் அலறியபடி இருக்கையில் சரிந்தார்.
    • குற்றவாளிகளை பிடிக்க டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஜெய்ட்பூர் பகுதியில் நிமா மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை ஆகும்.

    இந்த மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 2 இளைஞர்கள் வந்தனர். அதில் ஒருவர் தனது காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    அந்த இளைஞருக்கு அங்குள்ள செவிலியர்கள் கால் விரலில் உள்ள காயத்துக்கு கட்டுப்போட்டு விட்டனர். பிறகு அந்த 2 இளைஞர்களும் மருத்துவமனையில் உள்ள டாக்டரை பார்க்க வேண்டும் என்று கேட்டனர்.

    என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக டாக்டரை பார்க்க விரும்புவதாக கூறினார்கள். இதையடுத்து அந்த இளைஞர்களை டாக்டர்கள் அறைக்குள் செவிலியர்கள் அனுமதித்தனர்.

    அறைக்குள் சென்றதும் அந்த 2 இளைஞர்களும் டாக்டரை நெருங்கி சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் கைத்துப்பாக்கியை எடுத்து டாக்டர் தலையை குறி வைத்து சுட்டனர்.

    குண்டுகள் பாய்ந்த டாக்டர் அலறியபடி இருக்கையில் சரிந்தார். அடுத்த நிமிடமே ரத்த வெள்ளத்தில் பிணமானார். அடுத்த வினாடி அந்த அறையில் இருந்து 2 இளைஞர்களும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் ஜாவித்அக்தர் என்று தெரியவந்துள்ளது. அவர் விஞ்ஞானி டாக்டர் ஆவார். அவரை குறி வைத்துதான் 2 இளைஞர்களும் திட்டமிட்டு மருத்துவமனைக்கு வந்தது தெரிய வந்தது.

    அவர்களை பிடிக்க டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவர்கள் மருத்துவமனைக்குள் வரும் காட்சிகளும், தப்பி செல்லும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் இடம்பெற்று உள்ளது.

    அதை வைத்து 2 இளைஞர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள். அவர்கள் இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக இருக்கலாம் என்றும் டெல்லி போலீசார் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×