search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மெஜாரிட்டியை கடந்தார்... ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவின் வெற்றி உறுதி ஆனது
    X

    மெஜாரிட்டியை கடந்தார்... ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவின் வெற்றி உறுதி ஆனது

    • எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றார்.
    • 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்முவன் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார்.

    திரௌபதி முர்மு 3,78,000 வாக்கு மதிப்பும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்கு மதிப்பும் பெற்றிருந்தனர். எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றார். இதன்மூலம் திரவுபதி முர்மு 2,32,400 வாக்கு மதிப்பு முன்னிலை பெற்றார்.

    எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுகிறது. இதில் 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திரவுபதி முர்மு ஏற்கனவே 5,77,777 வாக்குகளை (வாக்கு மதிப்பு) பெற்றுள்ளார். இது தேர்தலில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை விட அதிகம் ஆகும். தற்போது 10 மாநில ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

    அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டபின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார்.

    Next Story
    ×