search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த தலைமை தேர்தல் ஆணையம்
    X

    அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த தலைமை தேர்தல் ஆணையம்

    • தேர்தல் நன்னடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.
    • மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. இதனால் தேர்தலைச் சந்திக்க தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் அன்றே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

    இதை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள், நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    கோவில்கள், சர்ச்கள், மசூதிகள், குருதுவாராக்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்குள் சென்று தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது. மீறினால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இதேபோல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், எந்தவித புதிய நலத்திட்டங்களுக்கான அறிவிப்போ, அரசாணைகளோ வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசுத்துறைகளின் செயலாளர்களுக்கு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

    Next Story
    ×