என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லி மந்திரி வீட்டில் பணம், நகைகள் பறிமுதல் - பாஜக கண்டனம்
- ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.
- சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின், அவரது உறவினர்கள் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.
இதற்கிடையே, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லி சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் வீடு, அவரது உதவியாளர் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.83 கோடி, 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.
சத்யேந்திர ஜெயின் வீட்டில் நகைகள், பணம் கைப்பற்றிய நிலையில், அவரை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என டெல்லி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.