search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பேடிஎம், கேஷ்ப்ரீ உள்ளிட்ட 6 நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை
    X

    பேடிஎம், கேஷ்ப்ரீ உள்ளிட்ட 6 நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

    • பேடிஎம் மற்றும் கேஷ் ப்ரீ நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
    • போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியர்கள் போலி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் சுமார் 1,100 மின்னணு கடன் செயலிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமாக 600 கடன் செயலிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சீன கடன் செயலிகளும் இதில் அடங்கும்.

    இந்த செயலிகள், இந்தியர்களை கடன் வலையில் வீழ்த்தி, ரூ.500 கோடிவரை முறைகேடாக சம்பாதித்துள்ளன. அவர்களின் மிரட்டலுக்கு 52 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்நிலையில், சீனர்களால் நடத்தப்படும் மொபைல்போன் மூலம் சட்ட விரோதமாக கடன் வழங்கும் செயலிகள் குறித்த வழக்கு தொடர்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலியான ரேசர்பே, பேடிஎம் மற்றும் கேஷ் ப்ரீ நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 6 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.

    சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.17 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனத்தில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்தியர்களை போலி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×