search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாங்கள் காளை மாட்டில் இருந்தே பால் கறந்துவிட்டோம்- அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
    X

    நாங்கள் காளை மாட்டில் இருந்தே பால் கறந்துவிட்டோம்- அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

    • 2027-ல் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என கெஜ்ரிவால் நம்பிக்கை
    • சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

    புதுடெல்லி:

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

    ஓராண்டில் நாம் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றினோம். டெல்லி மாநகராட்சியை வென்று விட்டோம். கோவாவில் 2 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளார்கள். குஜராத்தில் 14 சதவீத வாக்கு வங்கியுடன் 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ளோம். இதில் குஜராத்தில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல. இந்த வெற்றிக்குப் பிறகு என்னிடம் பேசிய ஒருவர், நீங்கள் காளையிடம் பால் கறந்துவிட்டீர்கள் என்றார்.

    அந்த அளவுக்கு கடினமான வெற்றி இது. பசுவில் பால் கறக்க அனைவராலும் முடியும். ஆனால், குஜராத்தில் 5 சீட்டுகள், 14 சதவீதம் வாக்குகள் பெற்று நாங்கள் காளை மாட்டில் பால் கறந்துள்ளோம். இதற்காக குஜராத் மக்களுக்கு நன்றி. எனவே கட்சியினர் கவலைப்பட வேண்டாம், 2027-ல் நாம் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம்.

    சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பொருட்களை யார் வாங்குகிறார்கள்? சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு பாஜகவுக்கு என்ன நிர்ப்பந்தம்? நமது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியாதா? நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதே பொருட்களை சீனாவிலிருந்து வாங்குகிறோம்.

    மோடி அரசுக்கு ராணுவ வீரர்களின் உயிர் மீது அக்கறை இல்லை. இந்திய மக்களை விரட்டி அடிக்கும் பாஜக அரசு, சீன மக்களை கட்டிப்பிடிக்கிறது. வியாபாரிகள், தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒரு கட்சி ஊழலில் சிக்கியுள்ளது, மற்றொரு கட்சி குண்டர்களை ஊக்குவிக்கிறது மற்றும் குண்டர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×